வீரமாமுனிவா்
கருத்தரங்கம்
மேலைநாட்டிலிருந்து தமிழகம் வந்து சமயமும்
தமிழும் வளா்த்த வீரமாமுனிவரின் விழாவானது
பாத்திமாக் கல்லூரியில் 4.2.2016 அன்று
நடைபெற்றது. கல்லூரி வளாகத்தின் வெளியே அமைந்துள்ள வீரமாமுனிவரின் சிலைக்கும் இராபா்ட்-தே-நொபிலி சிலைக்கும் மாலை அணிவித்து விழா
தொடங்கியது.
பொன்விழா அரங்கில் விளக்கேற்றி இறை வணக்கத்துடன் தொடா்ந்த விழாவில்
உதவிப் பேராசிரியா் முனைவா் இரா. ஏஞ்சல் வரவேற்புரை வழங்கினார். பாத்திமாக் கல்லூரி
செயலர் அருட்சகோதரி பிரான்ஸிஸ் பாலின் வாழ்த்துரை வழங்கினார். அருளானந்தர் கல்லூரி
, தமிழ்த்துறைத் தலைவர், அருட்தந்தை முனைவா் அன்பரசு, ”ஐரோப்பிய சேசு சபையாளர்களின் தமிழ்ப்பணி” குறித்து
சிறப்புரையாற்றினார். சேசு சபை சார்ந்த தந்தை கான்ஸ்தோன் லோரேன் கோர்து, தந்தை ஜோஸப்
பெர்ட்ராண்ட், தந்தை லூயிஸ் செயிண்ட் சீர் போன்ற பல போதகர்களின் தமிழ்ப்பணிப் பற்றி
விரிவாக விளக்கினார். வீரமாமுனிவரின் தமிழ்ப்பணியைப்
புரிந்து கொள்ள அவரது உரை வித்திட்டது.
உதவிப் பேராசிரியர் முனைவர் பாப்பா, ”திருக்காவலூர் கலம்பகம்
உணா்த்தும் அறிவியல் சிந்தனைகள்” என்ற தலைப்பிலும்,
உதவிப் பேராசிரியர் முனைவர் சி.சொர்ணமாலா, ”வீரமாமுனிவரின் இலக்கண விவரிப்புமுறை” என்ற
தலைப்பிலும் கட்டுரைகள் வழங்கினர். மாணவிகள் பங்கேற்ற உருக்காட்சியும், தேம்பாவணி மனனப்போட்டியும்
நடைபெற்றது. உதவிப் பேராசிரியா் முனைவர் செ.அன்பு ராணி தொகுத்து வழங்க, முதுலை முதலாமாண்டு
தமிழ் மாணவி சகாயமேரி நன்றி கூறினார்.
இதழியல்
கருத்தரங்கம்
பாத்திமாக் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக 4.2.2016 அன்று மதியம்
இரண்டு மணியளவில் இதழியல் கருத்தரங்கம் நடைபெற்றது. செம்மலர் இதழின் துணை ஆசிரியா்
திரு. சோழ. நாகராஜன் ”சமூக விழிப்புணர்வில்
இதழியல் துறையின் பங்களிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார். இணைப் பேராசிரியா் முனைவர்
க.லதா வரவேற்புரையாற்ற, உதவிப் பேராசிரியா் ச.அ.சுஜா தொகுத்து வழங்கினார். முதுலை இரண்டாமாண்டு
தமிழ் மாணவி ஓவியா நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.
தமிழ் உயராய்வு மையம், பாத்திமாக் கல்லூரி